உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள்:
*உடல் சோர்வு
*மூச்சுத் திணறல்
*சருமப் பிரச்சனை
*முடி உதிர்வு
*இதயத் துடிப்பில் மாற்றம்
*அரிப்பு
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
1)லெமன்,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அரைத்து சாறு எடுத்து பருக வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
2)மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த மாதுளம் பழத்தை அரைத்து ஜூஸ் எடுத்து பருகி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3)பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து பருகினால் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.
4)பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
5)தர்பூசணி பழத்தை பொடியாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.
6)நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும்.
7)பூசணி விதையை நெயில் வறுத்து பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் ஹீமோகுளோபின் பன்மடங்கு உயரும்.
8)நிலக்கடலை,பீன்ஸ் போன்ற பருப்புகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவின் அதிகரிக்கும்.
9)போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.திராட்சை பழச்சாறை பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.