கடும் மலச்சிக்கலால் அவதியடைந்து வருபவர்கள் கீழ்கண்ட வைத்திய குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி பலனை அனுபவியுங்கள்.
தீர்வு 01:-
*தயிர்
*ஆளிவிதை
முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் 50 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை வறுத்து பொடித்து தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்தால் இறுகிய மலம் ஈசியாக வெளியில் வந்துவிடும்.
அதேபோல் ஆளிவிதையை பொடித்து வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தாலும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.
தீர்வு 02:-
*ஓட்ஸ்
*தயிர்
ஒரு கப் தயிரில் ஓட்ஸ தேவையான அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த ஓட்ஸ் தயிர் கலவையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.
தீர்வு 03:-
*பால்
*நெய்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் குடலில் குவிந்துள்ள மலக் கழிவுகள் நிமிடங்களில் வெளியேறிவிடும்.
தீர்வு 04:-
*நெல்லிக்காய்
நான்கு அல்லது ஐந்து பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 05:-
*எலுமிச்சை தோல்
*நெய்
பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு எலுமிச்சை தோலை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக சரியாகும்.
தீர்வு 06:-
*பனங்கிழங்கு
*தண்ணீர்
இரண்டு அல்லது மூன்று பனங்கிழங்கை அவித்து வெயிலில் நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலந்து காலை நேரத்தில் பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.