நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது.
நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.
தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் வாய் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமாகும்.அகத்தி கீரை சாறை தேங்காய் பாலில் கலந்து குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.அகத்தி கீரை ஜூஸ் குடித்து வந்தால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை குணமாகும்.
அகத்தி கீரை ஜூஸ் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.அகத்தி கீரையை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க அகத்தி ஜூஸ் செய்து குடிக்கலாம்.
தேங்காய் பாலில் அகத்தி சாறு கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.அகத்தி கீரையில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் அகத்தி கீரையை சாப்பிட்டு வந்தால் அபாயம் குறையும்.
அகத்தி கீரை சாறு சொறி,சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது.உடலில் பித்தம் அதிகமாகிவிட்டால் அதை குறைக்க அகத்தி கீரை சாறு குடிக்கலாம்.விந்து குறைபாடு,மலட்டு தன்மை பிரச்சனை இருப்பவர்கள் வாரம் மூன்று முறை அகத்தி கீரை சாப்பிட வேண்டும்.
இருதய ஆரோக்கியம் மேம்பட அகத்தி கீரை சாப்பிடலாம்.உடலிலுள்ள புண்கள் குணமாக அகத்தி கீரை சாறை பூசலாம்.இரத்த சோகை பாதிப்பு குணமாக அகத்தி கீரை சாப்பிடலாம்.அகத்தி கீரை சாறு கருவளைய பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.