உடலில் HEMOGLOBIN LEVEL அதிகரிக்க இந்த கீரை வாரம் இருமுறை சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

இந்தியர்கள் பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஆண்களை விட பெண்கள் தான் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும்.எனவே இரும்புச்சத்து குறைபாடு நீங்க இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க முருங்கை கீரையை உட்கொள்ளுங்கள்.

முருங்கை கீரையில் கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,தாமிரம்,துத்தநாகம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.இந்த முருங்கை கீரையில் ஜூஸ்,துவையல்,பொரியல்,குழம்பு என்று தங்களுக்கு பிடித்த உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை துவையல்:

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)வர மிளகாய் – மூன்று
3)கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
4)உளுந்து பருப்பு – ஒரு ஸ்பூன்
5)நெல்லெண்ணய் – இரண்டு ஸ்பூன்
8)புளி – ஒரு துண்டு
9)உப்பு – தேவையான அளவு
10)கடுகு – அரை ஸ்பூன்
11)சீரகம் – கால் ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடலை பருப்பு,வர மிளகாய்,உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பிறகு அதே கடாயில் ஒரு துண்டு புளி,ஒரு கப் முருங்கை கீரை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.பிறகு இதை நன்றாக ஆறவிடவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் வதக்கிய முருங்கை கீரை,வறுத்த கடலை பருப்பு,உளுந்து பருப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.அதன் பின்னர் அரைத்த முருங்கை கீரை துவையலை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.இந்த துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.