ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

Photo of author

By Kowsalya

ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

நாகரீகம் வளர்ந்து கொண்டே போகும் நிலையில் கண்ட உணவுகளை சாப்பிட்டு சிறுவயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

இதனால் உடல் வலி, உடல் சோர்வு,கை, கால் மூட்டு வலி ஆகியவை ஏற்படுகின்றன ‌.

70 வயதிலும் 20 வயது போல சுறுசுறுப்பாக இருக்க இந்த முறையை பயன்படுத்தினால் பயன்பெறலாம்.

தேவையான பொருட்கள்:

1. கேழ்வரகு ஒரு கப்

2. பாதாம் 10

3. சோம்பு ஒரு ஸ்பூன்

4. பெரிய கற்கண்டு 2

 

செய்முறை:

1. மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

2. இதை நீங்கள் கண்ணாடி கண்டெய்னரில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

1. முதலில் கால் லிட்டர் பாலை காய்ச்சி கொள்ள வேண்டும்.

2. பின்பு இரண்டு ஸ்பூன் நாம் தயார் செய்து வைத்த பொடியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி பாலில் ஊற்றவும். அப்பொழுதுதான் சீக்கிரமாக கெட்டி படாது.

3. கைவிடாமல் பாலை 5 நிமிடம் வரை கிளறி விடவும்.

4. பின்பு சிறிதளவு சூடு ஆறியபிறகு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பருகலாம். அதில் ஏற்கனவே கற்கண்டு சேர்த்து உள்ளதால் இனிப்பு தேவைப்படாது.

இதனை நீங்கள் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இரவு படுக்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்னதாக எடுத்துக் கொள்ளலாம் . தொடர்ந்து ஒருவாரம் பத்து நாள் வரை இதை நீங்கள் குடித்துவர உடல் சோர்வு,உடல் வலி ,மூட்டுவலி, கை கால் வலி ஆகியவை பறந்து போய்விடும்.