தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!

Photo of author

By Divya

தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!

Divya

நாம் அடிக்கடி சாப்பிடும் கனிகளில் முக்கிய இடத்தில் இருப்பது பெரிய நெல்லிக்காய்தான்.இந்த காயில் ஏகப்பட்ட வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது தவிர வைட்டமின் ஈ,இரும்பு,பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதைவிட அதை உலர்த்தி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.சீசனில் கிடைக்கும் பெரிய நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒவ்வொரு நெல்லிக்கையையும் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உலர் நெல்லியை பொடியாக எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் தேனில் ஊறவைத்து சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரிய நெல்லிக்காயை பொடித்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

உலர் நெல்லிக்காய் நன்மைகள்:

1)இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சளி,இருமல் குணமாக உலர் நெல்லிக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

2)நெல்லிக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது.இதை பவுடராக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.

3)இரத்த அழுத்தம் கட்டுப்பட நெல்லிக்காய் கஷாயம் செய்து குடிக்கலாம்.நெல்லி வற்றலில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.இந்த உலர் நெல்லியை காலை நேரத்தில் சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.

4)இருதய நோய் பாதிப்பு குணமாக நெல்லிக்காய் வற்றலை பொடித்து டீ போட்டு குடிக்கலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.

5)சிறுநீரக கற்களை கரைக்க பெரிய நெல்லிக்காயை உலர்த்தி தேனில் கலந்து சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகள் குணமாக உலர் நெல்லி சாப்பிடலாம்.தினமும் இரண்டு உலர் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.முதுமையை தள்ளிப்போட தினமும் நெல்லிக்காய் வற்றலை சாப்பிடலாம்.