உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

Photo of author

By Divya

நம் பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு முக்கியமான பழக்கமாக இருப்பது வாழை இலையில் விருந்து வைப்பது தான்.வாழையில் உணவு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வாழையில் இலையில் உணவு வைத்து சாப்பிட்டாலே தனி ருசி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.வாழை இலையில் குளோரோபில் என்ற மருத்துவ குணம் நிறைந்த வேதிப்பொருள் அடங்கியிருக்கிறது.வாழை உணவு வைத்து சாப்பிட மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் வாழை இலையில் ஜூஸ்,ஹல்வா மற்றும் மாத்திரை செய்து பயன்படுத்த முடியும்.முற்றாத வாழை இலையை பறித்து சுத்தம் செய்து அதன் நடுத் தண்டை மட்டும் நீக்கிவிட்டு இலைகளை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் வாழையை இலையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்தால் வாழை இலை மாத்திரை ரெடி.இதை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

வாழை இலை ஜூஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழை இலை ஜூஸ் செய்து அருந்தலாம்.நார்ச்சத்து நிறைந்த வாழை இலையில் ஜூஸ் செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.வாழை இலை ஜூஸ் செரிமான சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.வாழை இலை ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.எனவே வாரத்தில் ஒருமுறை வாழை இலையில் ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கிடுங்கள்.வாழை இலையில் உணவு வைத்து சாப்பிட்டு வந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.எனவே அடிக்கடி வாழையில் உணவு வைத்து சாப்பிடும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.