உங்கள் இரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1.கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2.வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3.தண்ணீர் – ஒரு கப்
4.ஓமம் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிரகள வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை வாணலியில் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நீங்கள் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வேண்டும்.
இந்த பானத்தை ஆறவிட்டு காலை நேரத்தில் குடித்து வந்தால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.
தேவையான பொருட்கள்:-
1சீரகம் – ஒரு தேக்கரண்டி
2.தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த சீரகத் தூளை அதில் கொட்டி கோதிக்ஸ் வைத்து குடித்தால் இரத்தக் குழாயில் படிந்து கிடக்கும் கொழுப்பு கரையும்.
தேவையான பொருட்கள்:-
1.இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
2.எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3.ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
4.தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இதை கிண்ணத்தில் ஊற்றி
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடித்தால் இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்பு நீங்கும்.