தற்பொழுது எண்ணெய் இல்லாத உணவுகள் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கிறது.சைவ,அசைவ உணவுகள் அனைத்தும் தயாரிக்க எண்ணெய் அடிப்படை பொருளாக உள்ளது.குழந்தைகள,பெரியவர்கள் அனைவரும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ருசிக்க ஆசைப்படுகின்றனர்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் உள்ளது.
உடலுக்கு கொழுப்புசத்து அவசியமான ஒன்று என்றாலும் அதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது.
எனவே நம் உடலுக்கு கெடுதல் தரும் எண்ணையில் சமைப்பதை தவிர்த்துவிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
நாம் உணவு சமைக்க தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள்:
1)சோயாபீன் எண்ணெய்
2)சூரியகாந்தி எண்ணெய்
3)பாமாயில்
உணவு சமைக்க பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்:
1)சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்
2)சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்
3)ஆர்கானிக் நெய்
4)அவகேடோ எண்ணெய்
இந்த நான்கு எண்ணெய்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த நான்கு எண்ணெய்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
இந்த எண்ணெய்களில் உணவுகளை வறுத்து,பொரித்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக கெடுதல் ஏற்படாது என்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உடல் பருமன்,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை உணவு சமைக்க பயன்படுத்தலாம்.