பருப்பு வகைகளை இரவில் சாப்பிடுவதால் நன்மை பயக்குமா?

0
192

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் இவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் இரவு வேளைகளில் எந்த விதமான உணவுகளை எடுத்து கொள்வது என்ற குழப்பம் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

இரவு வேளைகளில் நாம் உண்ணும் உணவில் பருப்பை அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.அதில் அதிக கலோரிகள் இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆவது இல்லை.எனினும் உணவியல் நிபுணர்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடுகள் எதும் பெரிதாக விதிப்பதில்லை.பருப்பு வகைகளை நாம் தினந்தோறும் உணவில் எடுத்து கொள்வது நன்மை பயக்கும் ஆனால் அது இரவு வேளையில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். மேலும் பாசி பருப்பு மட்டும் எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் அதை இரவு வேளையில் எடுத்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இரவு நேரங்களில் மிகவும் லேசான மற்றும் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை எடுத்து கொள்வது நன்மை பயக்கும்.கடினமான உணவுகளை இரவு நேரங்களில் எடுத்து கொள்வதால் ஜீரணம் ஆவது கடினமாகும்.மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை இரவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

எனவே இரவில் பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பை சாப்பிடலாம்.மேலும் இது எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் இதை சாப்பிடுவது தவறில்லை.பொரித்த உணவுகள்,பாதாம், சீஸ் பனீர்,பட்டர்,நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Previous articleபொறியியல் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை எப்போது தொடங்கலாம்? ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள புதிய அட்டவணை!
Next article45 ஆயிரம் கோடியை இழந்த சீனா! இந்தியா வைத்த நிரந்தர ஆப்பு..!!