இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

0
210

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

உடல் சூடு என்பது உறுப்புகள் அதிக வெப்ப நிலையில் இருப்பதாகும்.  அதிகம் வெயிலில் இருப்பதாலும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உடல் சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் காரமான உணவுகள் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் சூடு ஏற்படுகிறது.

சூடு குறைய உடல் குளிர்ச்சி அடைய தரும் உணவுகள்

1. இளநீர் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள்  தினமும் குடித்து வர உடல் சூடானது குறைவு தொடங்கும். 2. ஆட்டுப்பால் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் ஆட்டுப் பாலை தினமும் குடித்து வர உடல் சூடு குறையும்.                         3.சந்தனாதி தைலம் உடலில் அதிகமான சூடு உள்ளவர்கள் ஆயுர்வேத கடைகளில் விற்க்க கூடிய சந்தனாதி தைலத்தை வாரத்தில் இரண்டு முறை தேய்த்து வந்தால்  சூடு குறையும்.மேலும்  உடல் சூடு இருப்பவர்கள் தயிர் மோர் நெய் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.                                  4. பருப்பை கீரை உடல் சூடு உள்ளவர்கள் கண்டிப்பாக உடலில் கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். கீரை வகைகள் முக்கியமாக பருப்பு கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடலில் இருக்கும் வெப்பத் தன்மை நீங்கும்.              5.நெல்லிக்காய்  உடல் சூடு இருப்பவர்கள் தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காயில்  சூட்டை குறைக்கும் தன்மை வாய்ந்தது.                                    6. வெண்பூசணி, கல்யாண முருங்கை, மணத்தக்காளி உடல் சூடு உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வெண்பூசணி கல்யாணி முருங்கை மணத்தக்காளி போன்ற ஏதேனும் ஒரு கீரை வகைகளை உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கீரைகள் உடல் சூட்டை குறைத்து உடலில் இருக்கும் ஹார்ட் கண்களை நன்கு செயல்படுத்தும் தன்மை கொண்டது.                                7.திராட்சை உடலில் அதிகமான வெப்பம் உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சை பழம் சாப்பிட விரும்புபவர்கள் ஜூஸ் போட்டு குடிக்கலாம் வெப்பத் தன்மை வேகமாக குறையும்.            8.தாமரைப்பூ உடல் சூடு உள்ள நபர்கள் தினமும் தாமரைப்பூ இதழ்களை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் இருதயமும் தாமரைப் பூ இதழ்கள் சாப்பிடுவதால் நன்கு வளர்ச்சி அடையும்.              9.வெள்ளை வெங்காயம்  உடலில் சூடு உள்ளவர்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். 10.சீரகத் தண்ணீர் உடல் சூடு உள்ளவர்கள் 1 ஸ்பூன் சீரகம் எடுத்துக் கொள்ளவும் 1 ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை அருந்தி வருவதால் உடல் சூடு முற்றிலும் குறையும்.

மேலும் கற்றாழை சாறு உடல் சூடு குறைய அருகம்புல் சாறு மற்றும் கற்றாழைச் சாரை குடித்து வந்தால் உடலில் இருக்கும் சூடு பிரச்சனை நீங்கும். கருவேப்பிலை மட்டும் கொத்தமல்லி துவையல் உடல் அதிக வெப்பநிலை கொண்டவர்கள் வாரத்தில் இரண்டு முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடல் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் இருக்கும். உடல் சூடு என்பது ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் உள்ள பிரச்சனையாகும். அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடல் சூடு பிரச்சனை வர காரணமாக உள்ளது.

Previous articleபிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!
Next articleகாசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!