இன்றைய காலத்தில் உணவு முறை பழக்கம் வேறுபட்டவையாக இருக்கிறது.தற்பொழுது வரும் நோய்கள் உணவுமுறை பழக்கத்தால் தான் வருகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது.மூன்றுவேளை உணவை உரிய நேரத்தில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பரவலான கருத்தாக உள்ளது.அதேபோல் இரவு நேரத்தில் நேரம் கடந்து உட்கொள்வது ஆரோக்கியமற்ற ஒன்று என்றும் இதுபோன்று தூங்கும் நேரத்தில் உட்கொள்வது உடல் நலத்தை மோசமாக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.
இன்றைய வாழ்க்கை சூழலில் அனைவராலும் இரவு 8 மணிக்குள் உட்கொள்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.வேலைப்பளு மற்றும் இதர காரணங்களால் சிலருக்கு இரவு நேர உணவு 9,10 மணிக்கு தான் இருக்கிறது.சிலர் வேலை முடித்து வந்து உணவு செய்து சாப்பிட 10 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.வாழ்க்கை சூழல் இப்படி இருக்கையில் இரவு உணவை நேரமாக உட்கொள்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.
சிலர் உணவு சமைக்க சலித்துக் கொண்டு கடையில் வாங்கி உட்கொள்கின்றனர்.நீங்கள் இரவு நேர உணவை 8 மணிக்குள் எடுத்துக் கொண்டாலும் அவை ஆரோக்கியமற்ற ஒன்றாக இருந்தால் எந்த பலனும் உடலுக்கு கிடைக்காது.
எனவே உங்களால் இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் நேரம் கடந்து உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கும்.
இரவு உணவு எளிதில் செரிமானமாகக் கூடியவையாக இருக்க வேண்டும்.மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இரவு உணவு தாமதமான எடுத்துக் கொள்ள நேரிட்டாலும் நாம் உட்கொள்ளும் உணவு சரியானதாக இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மாவுச்சத்து நிறைந்த உணவுகள்,மைதா உணவுகள்,கீரை வகைகள்,எண்ணையில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.