இந்த கிழங்கு பொடியை சாப்பிட்டால் நொடி பொழுதில் வயிற்றுப்போக்கு நிற்கும்!!

0
178
Eating this tuber powder will stop diarrhea in no time!!
Eating this tuber powder will stop diarrhea in no time!!

வேர்த்தண்டு கிழங்கில் இருந்து தயாரிக்க கூடிய மாவை ஆரோரூட் என்கின்றோம்.இதில் அதிகளவு மாவுச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,பாஸ்பரஸ்,போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இந்த ஆரோரூட் பொடியை உட்கொண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.இந்த மாவில் ரொட்டி,பிஸ்கட்,கேக்,பாஸ்தா போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,வாயுத் தொல்லை நீங்க,இதய ஆரோக்கியம் மேம்பட ஆரோரூட் பவுடரை உட்கொள்ளலாம்.

ஆரோரூட்டில் இருக்கின்ற ஃப்ரீபயாடிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இந்த ஃப்ரீபயாடிக் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:

1)ஆரோரூட் பொடி
2)தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அரோரூட் பவுடர் சேர்த்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.இந்த கலவை அடிபிடித்துவிடும் என்பதால் அடிக்கடி கரண்டி கொண்டு கிளறிவிட வேண்டும்.ஆரோரூட் கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.பிறகு இதை ஆறவைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை முழுமையாக குணமாகும்.

இந்த அரோரூட் பவுடர் தளர்வான மலத்தை கடினமாக்கி வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்கிறது.ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும் நபர்கள் இந்த ஆரோரூட் பவுடர் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Previous articleஆண்களின் விந்தணு உற்பத்திக்கு பக்காவான பத்து டிப்ஸ்..!!
Next articleLUNG CANCER: உஷார்.. நுரையீரல் புற்றுநோய் வந்தால் அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்!!