Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!!
இபி பில் அதிகமாக வருகிறதா? அதை குறைப்பதற்கு இதை செய்யுங்கள். நாம் பொதுவாக தண்ணீரை லிட்டரில் அளப்போம் அதேபோல உப்பு பருப்பு போன்றவற்றை கிராமில் அளப்போம். இதனுடைய அளவு நமக்கு தெரிவதால் மட்டுமே இதை நாம் அளந்து பயன்படுத்துகிறோம்.
அதேபோல நாம் பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு எலக்ட்ரிக் பொருளையும் உதாரணத்திற்கு, குளிர்சாதன பெட்டி ஏசி வாஷிங் மெஷின் வாட்டர் ஹீட்டர் இண்டக்ஷன் ஸ்டவ் என எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு கரண்டை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்து அதை சிக்கனமாகவோ அல்லது தாராளமாகவோ பயன்படுத்தி இருக்கிறீர்களா.
அதாவது நாம் ஏசி உபயோகப்படுத்தும் போது அதிக நேரம் ஓடினால் கரண்ட் பில் அதிகமாகும் என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். அது எவ்வளவு ஓடி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. இதே போலவே அனைத்து எலக்ட்ரிக் பொருள்களையும் அளவு தெரியாமல் குத்துமதிப்பாக இத்தனை நாட்களாக பயன்படுத்தி வருகிறோம்.
எனவே அது எப்படி என்பதை தெரிந்து கொண்டு அதை அளவுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம். பொதுவாக எலக்ட்ரிசிட்டியை யூனிட்டில் அளந்து வருவோம். அதாவது ஒரு ஆயிரம் வாட்ஸ் பல்பானது ஒரு மணி நேரம் ஓடினால் அது ஒரு யூனிட் ஆகும்.
அதேபோல் ஒரு நூறு வாட்ச் எல்இடி டிவி 10 மணி நேரம் ஓடினால் அது ஒரு யூனிட், அதுவே 5 மணி நேரம் ஓடினால் அரை யூனிட். ஒரு 70 வாட்ஸ் கொண்ட மின்விசிறி 14 மணி நேரம் ஓடினால் அது ஒரு யூனிட் ஆகும். இதையெல்லாம் எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பார்ப்போம்.
பொதுவாக நாம் எந்த எலக்ட்ரிக் பொருட்களையும் வாங்கும் போதும் அந்த பொருள் இருக்கக்கூடிய பாக்ஸில் இன்புட் ரேட்டிங் என்று கொடுத்து இருப்பார்கள். இதையும் நாம் வாங்கக்கூடிய அந்த எலக்ட்ரிக் பொருளை எவ்வளவு நேரம் பயன்படுத்துவோம் என்பதையும் அது எவ்வளவு யூனிட்டை எடுத்துக் கொள்ளும் என்பதையும் நாமே கண்டறியலாம். உதாரணத்திற்கு ஆயிரம் வாட்ஸ் உள்ள ஒரு எலக்ட்ரிக் பொருளானது ஒரு மணி நேரம் ஓடுகிறது என்றால், அதை
1000 W × 1h= 1000 Wh என்று சொல்லுவோம்.
உதாரணத்திற்கு ஆயிரம் கிராமை ஒரு கிலோகிராம் என்று சொல்லுவோம் அதேபோல ஆயிரம் மீட்டரை ஒரு கிலோமீட்டர் என்று சொல்லுவோம். அதாவது ஆயிரம் என்பதை கிலோ என்று குறிப்பிடுகிறோம் அதைப்போலவே, இதில் 1000Wh என்பதை 1 KWh என்று கூறுவோம். இதுதான் ஒரு யூனிட் என்று கூறப்படுவது.
இதை கணக்கில் எப்படி போடுவது என்றால்,
1000Wh/ 1000 = 1KWh
உதாரணத்திற்கு ஒரு 500 வாட்ஸ் லைட் இருக்கிறது என்றால், அது ஒரு மணி நேரம் ஓடும்போது எவ்வளவு யூனிட்டை எடுத்துக் கொள்ளும் என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்றால்,
500W × 1h = 500 Wh
இதை யூனிட் ஆக மாற்ற,
5000 Wh/ 1000 = 1/2 யூனிட்
அதாவது இந்த 500 வாட்ஸ் லைட் ஒரு மணி நேரம் ஓடினால் அரை யூனிட் ஆகும். இப்படிதான் ஒவ்வொரு எலக்ட்ரிக் பொருளையும் கணக்கிட வேண்டும்.
இப்போது இருக்கக்கூடிய எலக்ட்ரிசிட்டி தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே இருந்தால் யூனிட்டுக்கு ஒரு மதிப்பும் மேலே இருந்தால் அந்த யூனிட்டை விட அதிகமாக ஒரு அளவு வசூலிக்கிறார்கள். உதாரணத்திற்கு 500 யூனிட்டுக்கு கீழே இருந்தால் ஒரு மதிப்பும் 500 யூனிட்டுக்கு மேலே இருந்தால் ஒரு மதிப்பும் வசூல் செய்கிறார்கள்.
இந்த மாதிரி சமயங்களில் எந்த எலக்ட்ரிக் பொருள் நம் வீட்டில் அதிகமான கரண்டை எடுத்துக் கொள்கிறதோ அதன் பயன்பாட்டை தெரிந்து நாம் குறைத்து பயன்படுத்தலாம். எனவே மேலே கூறப்பட்டுள்ள முறைகளின் படி நாம் கணக்கிட்டாலே அந்த எலக்ட்ரிக் பொருளானது எவ்வளவு கரண்டை எடுத்துக் கொள்கிறது என்பதை ஈசியாக அறிந்து கொள்ளலாம்.