தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதியாக இருக்கும் சரவணனுக்கு துப்பாக்கியுடன் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு அரசு தற்போது கொடுத்திருக்கும் தளர்வின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த பெண்ணிக்ஸ் என்பவரும் அவருடைய தந்தை ஜெயராஜ் என்பவரும் தங்களுடைய கைப்பேசி கடையை குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமான நேரத்திற்கு திறந்து வைத்து இருந்த காரணத்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.
அதன்பிறகு உடம்பில் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உயிரிழந்தார்கள் அவ்வாறு உயிரிழந்த அந்த 2 பேரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் விளைவாகத்தான் அவர்கள் இறந்தார்கள் என்று புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களின் கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் கொலை வழக்கு குறித்து சாத்தான்குளம் நீதிபதிக்கு ஒரு மர்ம கும்பல் மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெல்லை டிஐஜி உத்தரவிட்டதன் பெயரில் நீதிபதியின் பாதுகாப்பிற்காக 24 மணிநேரமும் துப்பாக்கி உடன் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.