புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!
உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் அதிகளவு பரவி வருகின்றது.அதனால் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நெகடிவ் என்ற கொரோனா பரிசோதனை சான்றிதழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்நிலையில் நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும்.அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆலாசனை கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் கூறியதாவது புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப் மற்றும் பார்களில் 80 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து மெரினா,பெசன்ட்நகர் உட்பட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கோருவோருக்கு நாளை மாலை 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஸ்டார் ஓட்டல்கள்,கேளிக்கை விடுதியில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனை கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும்.நட்சத்திர ஓட்டல்கள்,உணவு விடுதிகள்,கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை நடத்த வேண்டும்.அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
நீச்சல் குளம் அல்லது அதற்கு அருகிலோ தற்காலிக மேடைகள் அமைக்க கூடாது.நீச்சல் குளங்களை நாளை மாலை 6 மணி முதல் புத்தாண்டு அன்று அதிகாலை ஆறு மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும்.கஞ்சா,போதை மருந்து உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதையோ உட்கொள்வதையோ தடுத்து அதன் நடமாட்டமோ இல்லமால் ஓட்டல் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் வெடிக்க அனுமதி கிடையாது.
கலாசார நடனங்கள் தவிர ஆபாச மற்றும் அருவருக்கத்தக்க கேளிக்கை நடனங்கள் தடை செய்ய வேண்டும்.நாளை இரவு எட்டு மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு,திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.