பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்!

0
164
Prime Minister Modi's mother passed away! The hospital explained the disappearance without treatment!
Prime Minister Modi's mother passed away! The hospital explained the disappearance without treatment!

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடலநலக் குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னபாக தான் காந்திநகரில் வசித்து வரும் அவருடைய தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார்.அதனையடுத்து நேற்று இரவு முதல் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தாயாரை காண பிரதமர் மோடி உடனடியாக அகமதாபாத் சென்றார்.அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருடைய தாயாரை நேரில் பார்த்து அவரது உடல் நிலை குறித்து அனைத்து தகவல்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.அப்போது மருத்துவர்கள் ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருகின்றது விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தனர்.ஆனால் இன்று  சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலாமானார்.

author avatar
Parthipan K