பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!!
நாடு முழுவதும் தற்போது அனைத்து சாலை போக்குவரத்தையும் மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய முடிவை தேசிய நெடுஞ்சாலை எடுத்துள்ளது.
அதாவது பசுமையான, அழகான பார்ப்போர்களை ஈர்க்கும் விதமாக ஈசிஆர் சாலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இதன் முதல் கட்டமாக தற்போது 22,500 மரக்கன்றுகளை நடும் முயற்சியில் தேசிய ஆணையம் ஈடுபட்டுள்ளது.
ஏனென்றால், இது கடலோர சாலை எனவே தென்னை மரங்கள் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அதிகாரிகள் சிலர் கூறி உள்ளனர். மேலும், மூன்றடி என மிகவும் உயரமாக வளரக்கூடிய தென்னை கன்றுகளை தேர்வு செய்து நட்டு வருகிறோம்.
வெளியில் தென்னை கன்றுகளும், சாலையை ஒட்டிய நிலையில், வேம்பு மற்றும் புங்கை மரங்கள் ஆகியவை இருக்கும் என்றும் கூறி உள்ளனர். இதுவரை 600 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள கன்றுகள் கூடிய விரைவேலேயே நடப்படும்.
முதலில் மாமல்லபுரம் முதல் முகையூர் பகுதி வரை நாற்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடுவதற்கான மரக்கன்றுகளை கொள்முதல் செய்யவும் அதை நடும் பணிக்காகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது வனத்துறையுடன் ஒரு ஒப்பந்ததை போட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூபாய் 5.5 கோடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஈசிஆர் சாலை முழுவதுமே பசுமை மயமாக மாறப்போகிறது.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மரங்கள் வெட்டப்பட்டதால் அப்பகுதி வெறுமையாக காட்சியளிக்கிறது. எனவே, மரங்கள் நடப்பட்டு அது வளர்ந்தால் தான் மீண்டும் அப்பகுதி பசுமையாக காணப்படும்.
தற்போது அனைத்து பகுதிகளிலும், சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, அதிகமான மரக்கன்றுகள் தேவைப்பட்டு வருகிறது.மேலும், இந்த சாலை விரிவாக்க பணிகள் சரக்கை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான செலவைக் குறைக்கவே செய்யப்பட்டு வருகிறது.