அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

0
226
#image_title
அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!
மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மதுரை சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்விக்கு தனது காட்டமான பதிலை தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை [அண்ணாமலை]பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள்.
மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள்[அண்ணாமலை] குறித்து எதற்குப் பேச்சு. கீழே இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள் முன்பு தமிழிசை இருந்தார்கள், அடுத்து எல் முருகன், இப்போது அண்ணாமலை. இப்படி மாறிக் கொண்டே இருப்பார்கள். அது குறித்து எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை.
எங்களைப் பொறுத்தவரைக் கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தான் முடிவு செய்வார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் சமயங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை அப்படித்தான் நடந்தது. இங்குள்ள மாநில தலைவர்களிடம் எல்லாம் யாரும் நாங்கள் பேசவில்லை என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலாக கூறியிருப்பது, அதிமுக பாஜக கூட்டணியில் அதிகப்படியான விரிசல் உள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Previous articleவிடிய விடிய ஓடும் டாஸ்மாக் – இழுத்து பூட்டிய வாலிபர் சங்கத்தினர்
Next article12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு