12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

0
161
AM Vikrama Raja
AM Vikrama Raja

12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

 

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேலை நீட்டிப்பு சட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற மசோதாவை அரசே நிறைவேற்றியதற்கு பேரமைப்பு சார்பில் மனமார்ந்த வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வணிகர்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பை கணிசமாக குறைக்க வேண்டும். தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடாக இந்தியா உருவாகி உள்ளது. ஆகவே அனைவரும் பில் போட்டு பொருட்களை வாங்க வேண்டும். அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற சிந்தனையை அரசு உருவாக்க வேண்டும்.

 

ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் பங்கேற்கிறார்கள். இதில் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு இடர்பாடுகளை தீர்மானமாக நிறைவேற்ற இருக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு சட்டம், சாமானிய வணிகர்களுக்கு ஒரு சட்டம் என நிறைவேற்றுகிறார்கள்.

 

12 மணி நேரம் வேலை செய்தால் தான் இப்போதுள்ள போட்டி உலகத்தில் சமாளிக்க முடியும் என்பதால் அந்த சட்டத்தை வரவேற்கிறோம். 24 மணி நேரமும் கடையை இயக்கலாம் என்ற சட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எங்காவது காவல்துறையினர் இடையூறு செய்தால் அதை உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என கூறினார்.

 

இந்நிலையில், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரும் 27-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.