திமுக கட்சியே கிடையாது அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி! எடப்பாடியின் தெறிக்கும் பிரச்சார பேச்சு

Photo of author

By Parthipan K

திமுக கட்சியே கிடையாது அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி! எடப்பாடியின் தெறிக்கும் பிரச்சார பேச்சு

தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கம்,ராதாபுரம் போன்ற இடங்களில் இன்று பிரச்சாரம் செய்தார்,

திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார், தான் ஒரு விவசாயி, விக்ரவாண்டி தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி என்றும் விவசாயியான வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் திமுக ஒரு கட்சியே இல்லை, அது ஒரு கார்பரேட் கம்பெனி என்றும் இதில் டைரக்டர்களாக ஸ்டாலின்,பொன்முடி,ஏ.வ. வேலு போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் அவர்களின் வாரிசுகள் மட்டுமே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வரமுடியும் என்று கடுமையாக விமர்சித்தார்,

மு.க.ஸ்டாலின் தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் செல்வாக்கில் திமுகவிற்கு தலைவராக வந்தவர் என்றும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராகவும் நியமித்து விட்டார் என்று கடுமையாக விமர்சித்தார்.

கேபிள் கட்டணத்தை குறைக்கிறேன் என்று ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது, ஆனால் 40 சேனல்கள் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்றும் நான் 259 ரூபாய் இருந்த கேபிள் சேனல்களை 159 ரூபாயாக குறைத்து மக்களுக்கு பயன் அடைய செய்தேன் என்றும் குறிப்பிட்டார்.

திமுகவை சேர்ந்த குடும்பத்தினர்கள் மட்டும்தான் அக்கட்சியை அலங்கரிக்க முடியும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும், நாங்கள் புண்ணியம் செய்தோம் முதலமைச்சர் பதவி கிடைத்தது, வெறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதலமைச்சராக ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்,

அவர் ஜப்பான் நாட்டின் துணை முதலமைச்சராக ஆகலாமே தவிர தமிழக முதலமைச்சராக முடியாது என்று கிண்டல் செய்தார், எனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு இருப்பதனால் தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன்,

அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் மட்டும்தான் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராகவும் வரமுடியும், திமுகவில் வாரிசு அடிப்படையிலேயே பதவிக்கு வரமுடியும் என்று அவர் பேச்சில் அனல் பறந்தது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் வேண்டிய இடத்தில் அணைகட்டுகள் கட்டப்படும் என்றும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், திமுக வெற்றி பெற்றால் எண்ணிக்கை தான் அவர்களுக்கு எண்ணிக்கை தான் கூடுமே தவிர, வேறு ஏதும் நடக்காது, அதிமுக வெற்றி பெற்றால் விக்கிரவாண்டி மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும் என்றும் தெரிவித்தார்,

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள், ஆனால் வேலூர் தேர்தலில் நூலிழையில் வெற்றி பறிகொடுக்கப்பட்டது,

அதுவும் 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்றத்தொகுதிகள் அதிமுகவும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் அதிக வாக்குகள் வாங்கினோம், ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை வேலூர் மக்கள் நிராகரித்து விட்டனர், இதன் காரணமாகவே மு.கஸ்டாலின் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடுத்து வருகிறார் என்று திமுகவை கடுமையாக சாடினார் அவரது பேச்சில் இன்று அனல் பறந்தது.

,