கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

Photo of author

By Murugan

கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

Murugan

eps

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக ஏற்கனவே பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டார். இது இந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது தெரியவில்லை. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்தால் திமுகவை தோற்கடிக்கலாம். ஆனால், சீமான் எப்போதும் தனித்தே போட்டியிடுவார். விஜய் என்ன திட்டமிடுகிறார் என்பது தெரியவில்லை.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

ஒருபக்கம், அதிமுக இப்போது பலவீனமாக இருக்கிறது. ஓபிஎஸ் ஒருபக்கம், சசிகலா, டிடிவி தினகரன் ஒருபக்கம் என அதிமுகவே பிரிந்து கிடக்கிறது. திமுகவை தோற்கடிக்க 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்கள் ஒன்றிணைவார்களா என்பது தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தார். மேலும், சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை எனவும் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.