எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

Sakthi

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது இதனை தொடர்ந்து 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது.

சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட இருக்கும் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். வரிசைப்படி சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் போன்றவற்றை தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி செய்து வைத்திருக்கிறார்.