பிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்த பிரச்சாரத்தின் போது தமிழக மக்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளையும், வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறார்.அதேபோல பொதுமக்களும் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் வருகிறது. அதை மனதில் அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரத்தின் போது வரும் 14 ஆம் தேதி லாக்டவுன் போட வேண்டும் என இளைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை கேட்ட முதல்வர் சில நொடிகளில், சுதாரித்துக்கொண்டு குலுங்குலுங்க சிரித்துக் கொண்டே உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தார்.இளைஞர்கள் கோரிக்கைக்கு முதல்வர் பதிலளிக்கும் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது