விவசாயிகளை பயன் அடைய செய்யும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே மாதம் வாக்கில் தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுக சார்பில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . அதனை தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அந்த கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சென்ற 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கின்ற அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுவிட்டு, தன்னுடைய சொந்த தொகுதியில் முதல் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மற்றும் பல்லடம் ,போன்ற இடங்களில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் நான் ஒரு விவசாயி இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கான அரசாங்கம் ஸ்டாலின் போல கனிமொழியும் கூட போகும் இடம் எல்லாம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த சமயத்தில் திமுக மறுத்தால் மக்களுக்கு செய்த நன்மைகள் என்னென்ன தமிழ்நாட்டிற்கு சேவை செய்த நன்மை மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்வு காணும் விதமாக 1100 என்ற திட்டத்தை ஸ்டாலின் தெரிவித்து நான் செயல்படுத்தவில்லை.
விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரத்திற்கும் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படும். தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலுமாக அகற்றும் விதமாக 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.