2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பழனிசாமி அவர்கள் பேருந்தில் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பயணம் செய்யும் பேருந்து சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் டப்பா பஸ்ஸை போல இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிண்டல் செய்தார். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நான் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போன்ற ஒரு பேருந்தில் வருவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நான் ஒரு விவசாயி, என்னால் இந்த மாதிரி பேருந்தில் தான் வரமுடியும். நான் உங்களின் தந்தையை போன்ற ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் இல்லை. நான் பேருந்தில் வந்து மக்களை சந்திப்பதை எல்லோருக்கும் பிரபலப்படுத்தியத்திற்கு நன்றி. நாட்டு நடப்பை பற்றி பேச சொன்னால் நான் பஸ்ஸில் வருவதை பற்றி முதல்வர் பேசுகிறார்.
இந்த பஸ்ஸை பற்றிய கவலையை விடுங்கள், தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பேருந்துகளும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போலத்தான் ஓடுகின்றன. பாதி வழியில் டயர் கழண்டு செல்வதையும், அரசு பேருந்தின் மேற்க்கூரை பறந்து செல்வதையும், மழை நேரத்தில் பேருந்துக்குள் அமர்ந்து செல்லும் மக்கள் குடை பிடித்துக்கொண்டு செல்வதையும் மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்கிறாங்க என்று முதல்வர் ஸ்டாலினை வசைபாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ்ஸின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.