பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

0
21
admk

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் அமித்ஷாவின் வீட்டிற்கு சென்றார் பழனிச்சாமி. அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

eps

மேலும், டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறர்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி விளக்களித்திருக்கிறார்.

மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்திருக்கிறார். கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleதோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..
Next articleகூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…