வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு

Photo of author

By Anand

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் சென்றிருந்தார்.அந்த பயணத்தின்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றதால் அது இன்ப சுற்றுலாவா என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில் அவர் சென்றது தனி விமானம் என்றும் அதற்கான கட்டணத்தை திமுக கட்சி செலுத்தியது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இவ்வளவு விளக்கம் அளித்தும் ஓயாத இந்த சர்ச்சை இருதரப்பிலும் மாறி மாறி விமர்சனங்களாக வெளியானது.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்து தனியார் ஊடகத்தில் நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் செந்தில்வேல் உண்மைக்கு மாறாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியின்போது குடும்பத்துடன் வெளிநாட்டு பயணம் சென்றதாகவும்,குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலீடு செய்ய சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையறிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்மீது செந்தில்வேல் உண்மைக்கு மாறாக குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும் அதற்காக 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.

“30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர், நான் தமிழக முதல்வராக இருந்தபோது ,தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன்,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார் எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.