தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2 ஆம் தேதியான நேற்று எண்ணப்பட்டது நேற்று காலை 8 மணி அளவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆகவே பத்து வருடங்களுக்கு பின்னர் திமுக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 முதலமைச்சர் வேட்பாளர்கள் களம் கண்டார்கள் . அதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார்கள். மற்ற 3 முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சியை இருந்திருக்கக்கூடிய அதிமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. அதேபோல இந்த தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்திருந்தாலும் அது அந்தக் கட்சியின் தலைவர்களை பெரிய அளவில் பாதிக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனும் மிகப் பெரிய ஆளுமை இயற்கை எய்தியதை முன்னிட்டு தமிழகத்தில் இனி அதிமுக இல்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் அதை எல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு மாபெரும் எதிர்க் கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடம் வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு திமுக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.