சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து இருக்கின்றார்.
நேற்று காலை 10 மணி அளவில் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றதாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட சபை உறுப்பினர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் போன்ற முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உரையாடி இருக்கின்றார்கள். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் சசிகலாவுடன் உரையாடி வரும் நிர்வாகிகளை அவர்களுக்கே தெரியாமல் கண்காணிக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.