எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு!

Photo of author

By Sakthi

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா குடும்பத்திற்கு சென்னையிலிருந்து தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துளசி அய்யா வாண்டையார் குடும்பத்திற்கு என்று தனி மரியாதை இருந்து வருகிறது. மிகவும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த இவர் மீது அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமாகி இருக்கிறார் அவருடைய உடல் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அவருடைய மறைவிற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் கல்வி வள்ளலாகவும் டெல்டா மாவட்ட மக்களின் பேரன்பை பெற்றவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

திரு பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவருடைய ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.