எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல்

0
191
Edappadi Palaniswami Property List
Edappadi Palaniswami Property List

எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நேற்று வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் வேட்பமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் அவருடைய சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி அவருக்கு ரூ.47 லட்சத்து 64 ஆயிரத்து 542 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவருடைய பெயரில் அசையா சொத்துக்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலமும், 6 ஆயிரத்து 700 சதுரடி வீட்டு மனையும் உள்ளதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல இவருடைய மனைவி ராதா பெயரில் உள்ள சொத்து விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவருடைய மனைவியின் பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 631 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.2 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 981 மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இவரது பெயரில் ரூ.14 லட்சத்து 75 ஆயிரத்து 453 மதிப்பில் வீட்டுக்கடனும் உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

இவரது ரொக்க கையிருப்பாக ரூ.2 லட்சம் பணமும் மற்றும் 90 பவுன் நகையும் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 898 இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அளித்துள்ள இந்த சொத்து பட்டியலில், வருமான வரி கணக்கு தாக்கல் சமர்ப்பிக்கப்பட்ட அவருடைய கணக்கு விவரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 537-ஆக இருந்த ஆண்டு வருமானமானது, 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 724 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஒரு வருடத்தில் முதல்வருக்கு சுமார் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானமானது குறைந்துள்ளது.

அதேபோல் அவருடைய மனைவியின் ஆண்டு வருமானமும் கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.22 லட்சத்து 75 ஆயிரத்து 288-ஆக இருந்த அவரது ஆண்டு வருமானமானது, 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 935 ஆக குறைந்துள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleஅப்பா ஸ்டாலினையே ஓவர் டேக் செய்த உதயநிதி… ஓட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… கோடிக்கணக்கில் கடன் வேற…!
Next articleகொழுப்பு கட்டி கரைய மிளகுடன் இதை தேய்த்தால் கொழுப்புக்கட்டி காணாமல் போகும்!