எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

Photo of author

By Murugan

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

Murugan

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன.

அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. என மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பலமுறை சொன்னார். ஆனால், நாங்கள் அடிமை அல்ல தொடர்ந்து பழனிச்சாமி சொல்லி வந்தார்.

கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால், இரண்டு தேர்தல்களிலுமே அதிமுக தோல்வி அடைந்தது. அதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இனிமேல் பாஜகவுடன் கூட்டணி நடித்தால் அதிமுகவின் எதிர்காலம் அவ்வளவுதான் என கணக்குப்போட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகினார்.

கடந்த 2 வருடங்களாக அதிமுக தனித்து செயல்பட்டு வருகிறது. மேலும், இனிமேல் தனது தலைமையில் மட்டுமே அதிமுக செயல்பட வேண்டும். பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களை கட்சியில் இணைக்கக் கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், சமீபத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்திருக்கிறது. மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அரசு மிரட்டுவதாக திமுக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பதில் சொன்ன பழனிச்சாமி ‘நாங்கள் இப்போது ஆட்சியிலேயே இல்லை. அப்படி இருக்க உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்களை எப்படி செய்ய முடியும்?.. திமுக மட்டுமே எங்கள் எதிரி. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்’ என சொல்லியிருக்கிறார்.