பிரிஞ்சது பிரிஞ்சதுதான்.. சேர வாய்ப்பே இல்ல!.. பொடி வைத்து பேசிய பழனிச்சாமி…

Photo of author

By Murugan

பிரிஞ்சது பிரிஞ்சதுதான்.. சேர வாய்ப்பே இல்ல!.. பொடி வைத்து பேசிய பழனிச்சாமி…

Murugan

eps

கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. இது ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிடிக்காமல் போக தர்மயுத்தம் துவங்கினார். ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது.

அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்கள் நடந்து எடப்பாடி தரப்புக்கு தலைவலியை கொடுத்தது. ஆனால், பாஜகவின் முயற்சியில் பழனிச்சாமி – ஓபிஎஸ் இருவரும் இணைந்தார்கள். பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால், டம்மியாக உணர்ந்த ஓபிஎஸ் மீண்டும் குடைச்சலை கொடுக்க அவரை கட்சியிலிருந்தே தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின் இப்போதுவரை ஓபிஎஸ் தனியாகவே செயல்பட்டு வருகிறார்.

eps

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்நிலயில், இன்று பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘பிரிந்தது பிரிந்ததுதான். சேர வாய்ப்பே இல்லை. கட்சியை இரண்டாக உடைத்து துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்த்து கொள்ள மாட்டேம். அந்த முடிவில் மாற்றமே இல்லை’ என தெரிவித்திருக்கிறார். பழனிச்சாமி சொல்வதை பார்க்கும்போது இனிமேல் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி என்கிற ஒற்றை தலைமையின் கீழ் மட்டுமே செயல்படும் என்பது தெளிவாக புரிகிறது.