தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறமோ துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையையும் அதையொட்டி இருக்கின்ற பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கின்றார்.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய ஒரே மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.அதோடு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் கூட்டம் ஏராளமாக இருப்பதால் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விதத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
மார்ச் மாதம் 21ஆம் தேதி நாளை மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் ஊத்தங்கரை மற்றும் மாலை 6 45 மணி அளவில் பர்கூரிலும் அதேபோல இரவு 8 மணி அளவில் கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் தன்னுடைய பரப்புரையை செய்யவிருக்கிறார். இரவு 9 மணி அளவில் சூளகிரியிலும் தன்னுடைய பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்யவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இரவு அவர் ஓசூரில் தங்க இருக்கின்றார். அதற்கு மறுநாள் காலை 9 மணி அளவில் ஓசூர் நகரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லவிருக்கிறார்.
ஆகவே அந்த மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையைத் தொடர்ந்து சேலம் சரக காவல்துறை டிஐஜி பிரதீப்குமார் நேற்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அவர் கிருஷ்ணகிரியில் முதல்வர் பிரச்சாரம் செய்வதற்கும் பகுதிகள் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். அதோடு தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கின்றார். தேர்தல் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பண்டிகங்காதாதருடன் ஆலோசனை செய்து இருக்கின்றார் டிஐஜி பிரதீப்குமார்.