அதிமுகவின் அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்தபோது திமுக ஆட்சியையும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் ஒப்பிட்டு பாருங்கள் அதிமுக ஆட்சியில் ஏகப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகின்றார் ராதாபுரம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். அதிகாரத்தில் இருந்த சமயத்தில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காத ஒரே கட்சி திமுக தான் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
அதோடு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வைத்திருப்பதன் மூலமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்து வருகின்றது. அரசுப் பள்ளிகளில் படித்த ஆறு பேருக்கு தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது ஒரு காலத்தில் ஆனால் தற்சமயம் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்த காரணத்தினால், இந்த வருடம் 435 பேர் பல் மருத்துவம் உள்பட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர்ந்து இருக்கிறார்கள்.அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்று இருக்கிறது அதிமுக அரசு 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி இருக்கிறது.
என்னுடைய அரசியல் அனுபவம் தான் உதயநிதியின் வயது அவருக்கு அதிமுகவை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர். திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலினின் குடும்பத்தை தவிர்த்துவிட்டு வேறு யாரும் பிரசாரத்திற்கு செல்வது கிடையாது எனவும் குற்றம் சாட்டி இருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அரசு அதிகாரியை தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியம் இங்கே கிடையாது என்று தெரிவித்த முதலமைச்சர் 1100 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும், தமிழக அரசுக்கு இது வரையில் 55 ஆயிரம் புகார்கள் வந்து இருக்கிறது எனவும் அதிமுக அரசு அதனை நிச்சயமாக நிறைவேற்றும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் பெட்டி வைத்து மனு வாங்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று தெரிவித்தார். திமுகவினருக்கு கொடுத்து பழக்கம் இல்லை எடுத்து தான் பழக்கம் என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.