எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!

Photo of author

By Rupa

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே  உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது என கூறி வந்தனர். அப்படி இருக்கையில் விவசாய சங்கத்தினர்  எடப்பாடிக்காக பாராட்டு விழா நடத்திய போது முழுமையாக அதனை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்தார். அதற்கு முக்கிய காரணமாக எடப்பாடி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றதாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

ஆனால் இது ஏற்ற காரணம் கிடையாது என பலரும் கூறி வந்தனர். அப்படி இருக்கையில் இன்று திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விடம் உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன் வைத்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியதாவது, எங்க கட்சி குறித்து தான் ஓயாத பேச்சு இருக்கும். எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே பிரச்சனை ஏதும் இல்லை.

அதேபோல பாராட்டு விழா நடத்தியது எங்கள் கட்சி சார்பாக இல்லை, விவசாய சங்கம் தான். அதில் மறைந்த முதல்வர்களின் புகைப்படம் இல்லை என்று தான் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். இதை ஊதி பெரிதாக்கி பல கைக்கூலி ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகின்றனர். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை அடுத்து கட்சியை ஒருங்கிணைத்து எடுத்துச் செல்வது எடப்பாடி பழனிச்சாமி தான், அவர் குறித்து அவதூர் பரப்பவே இப்படி திமுக கைக்கூலிகள் போட்டி போட்டுக்கொண்டு பேசி வருகின்றனர்.

இதெல்லாம் நியாயமா?? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் செங்கோட்டையன் விழா நடத்திய அமைப்பாளர்களை தான் குறை சொன்னாரே தவிர எடப்பாடியை இல்லை என்று இவர்களுக்குள் நடந்து வரும் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.