எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!!

Photo of author

By Rupa

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஆரம்பித்தது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொழுது பன்னீர்செல்வம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொதுக்குழு கூட்டம் அமைத்து ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே பன்னீர்செல்வம் தனது ஆட்கள் கொண்டு அதிமுக தலைமையகத்தை சூறையாடியது. மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. முதல் முறை தொடுக்கப்பட்ட வழக்கில், எடப்பாடிக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்தது. இதனை ஏற்காத பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு தொடுத்தார். தற்போது அந்த வழக்கானது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு குறித்து எடப்பாடி தரப்பில் பதில் மனு அளிக்கையில் அதில் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கானது நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி பொதுச் செயலாளர் என்று குறிப்பிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேற்கொண்டு எடப்பாடி தரப்பு இதற்கு மன்னிப்பும் கோரியுள்ளனர். இந்த நிலையில் மனுவை திருத்தி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு இந்த வழக்கு நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.