ADMK: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையேயான போரானது கட்சியை பிரிக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி கலந்து கொண்டால் செங்கோட்டையன் இருப்பதில்லை. சட்டமன்ற பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அதிமுகவினர், ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடத்தும் போது அதையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார்.
ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வாரியான தலைகள் கட்சியை விட்டு விலகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஓபிஎஸ் சசிகலா தினகரன் என யாரும் அதிமுகவுடன் இணைப்பில் இல்லை. இந்த முறை செங்கோட்டையன் அந்த வரிசையில் உள்ளார். இதற்கு முக்கிய காரணமாக கூறுவது, பல இடங்களில் இவருக்கு தர வேண்டிய மரியாதை கிடைக்காதது தான். மேற்கொண்டு இவர் கட்சியை விட்டு விலகி விட்டால் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உடன் இணைந்து அணி அமைத்து அதிமுகவை கைப்பற்றி விடலாம் என எண்ணி பல திட்டங்களை தீட்டி வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அதிமுக தலைமை ஆட்டம் கண்டு விட்டதாகவும் மீண்டும் விரிசல் ஏற்படும் என்றும் பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான் செங்கோட்டையன் மூக்கை உடைக்கும் வகையிலான பதிலை எடப்பாடி அளித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட விரிசல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, எங்கள் கட்சியை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் எங்களை யாராலும் பிரிக்க முடியாது, பத்திரிகையாளர்கள் தான் தங்களைப் பிரித்து வைத்து பார்க்கின்றனர்.
நான் எப்பொழுது முதல்வரானேனோ அன்றிலிருந்து கட்சி உடைக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள், அதை அனைத்தையும் தகர்த்திதான் வருகின்றேன். அதேபோல அதிமுகவை உடைக்க வேண்டும் என நினைப்பார்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது மேற்கொண்டு முயற்சி செய்யும் பட்சத்தில் அவர்கள் மூக்கு உடைபட்டு போகும் சூழல் உண்டாகும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியது, செங்கோட்டையானை தான் என்றும் அவர் திட்டம் ஒருபோதும் பலிக்காது என்பதை இங்கு பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.