புளுகு மூட்டை ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி பொளேர்!

0
113

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் முதல்வர் துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்று தமிழக அரசியலின் முக்கிய புள்ளிகள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் எதிர்க்கட்சியான திமுகவை குறை சொல்வதும் எதிர்கட்சியான திமுக பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் அதிமுக அரசை குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

அந்தவிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு மீதும் எடப்பாடி பழனிச்சாமி மீதும் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். அதனாலும் அது எதையுமே பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை அதிமுக தலைமை.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்பொழுதும் போல தான் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் தான் செல்லும் இடமெல்லாம் அதிமுகவை பற்றி குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களையும் அதேபோல அதிமுகவின் வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களையும் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர் எப்பொழுதுமே எங்களை குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறார். அதோடு அவர் செல்லுமிடமெல்லாம் பொதுமக்களிடம் பொய்களை உழைத்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை ஏமாற்றி வருகிறார் என்று தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் இந்த மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கின்றோம் என்பது போன்ற கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டு வருகின்றார். அவரை இங்கே வந்து பார்த்து விட்டுச் செல்ல சொல்லுங்கள். அதோடு நீங்களும் சென்று பாருங்கள் நாங்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களுடைய மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உடனடியாக அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதோடு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.அதோடு மட்டுமல்லாமல் 2000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வீடுகள் அனைத்தையும் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் ஒரு நல்ல நாளாக பார்த்து நானே வந்து திறந்து வைப்பேன் என்று விவரித்திருக்கிறார்.

அதேபோல கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து இருக்கின்றோம் அதற்கான ரசீதுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு போகுமிடமெல்லாம் பொய் பிரச்சாரத்தை செய்து ஆளும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவே அவர் செயல்பட்டு வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

எப்படி இந்த மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் எங்கள் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது இது எதுவுமே அவர் கண்ணுக்கு தெரியாதா பொய்யுரை வைப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் ஆகவே தயவு செய்து யாரும் அவரை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.