திமுக தலையிலேயே கை வைக்கும் எடப்பாடி.. இனி காங்கிரஸ் கூட்டணி இல்லை!! நெருக்கடியில் தவிக்கும் ஸ்டாலின்!!
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை முறித்த பிறகு சற்று தொய்வு பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது.ஆனால் அவர்கள் அனைவரின் வாயை அடைக்கும் வகையில் எடப்பாடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து தீவிரம் காட்டி வருகிறார்.முதலில் தனது டீமை வைத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதற்கு அடுத்தபடியாக சிபிஐ விசாரணையை கொண்டு வர வேண்டுமென்று சட்டசபை பட்ஜெட் விவாதத்தின் போது வலியுறுத்தினார்.
மேற்கொண்டு சபாநாயகர் அதனை ஏற்க மறுத்தார்.அதுமட்டுமின்றி ஆளுனரிடமும் சிபிஐ விசாரணை வைக்கும்படி மனுவும் கொடுத்துள்ளார்.இதற்கிடையே உயிரிழப்பு குறித்து சென்னையில் போராட்டமும் நடத்தினார்.இவ்வாறு அரசியல் களத்தை சூடு பிடிக்கும் வகையில் தினம் தோறும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவிற்கு அழுத்தம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் தான் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடப்பாடி பெரிய அளவில் திட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர்.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட இணையவில்லை.இனியும் இணைய மாட்டோம் என்று கூறிய நிலையில், காங்கிரசை தன் வசம் வர அடித்தளம் போட்டு வருகிறாராம். சமீபகாலமாகவே திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தி நிலவி வருகிறது.குறிப்பாக காங்கிரஸ் நிர்வாகியான செல்வப் பெருந்தகை உள்ளிட்டவர்களை முதல்வர் என்று அவ்வபோது கூறும்போதும்,மேற்கொண்டு ஓர் மேடையில் நம்மால் தனித்து போட்டியிட முடியாது,எவ்வளவு நாட்கள் இப்படி சார்ந்து இருப்பது என்றெல்லாம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது திமுக வட்டத்தினிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.திமுக-வோ கூட்டணி என்ற காரணத்தினாலே ஏதும் சொல்ல முடியாமல் அமைதி காத்து வருகின்றனர்.அதேபோல சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள், கடந்த முறை அரசு வழங்கிய மிதிவண்டிகள் அனைத்தும் பேரிச்சம் பழத்திற்கு தான் உதவும் என்று குறை கூறி ஆளும் கட்சியை குற்றம் சாட்டியுள்ளார்.இது அனைத்தும் திமுகவில் ஏற்பட்டு வரும் விரிசலை காட்டுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி, சோனியா காந்தி என்று கூறியுள்ளார்.இதே போல தான் கடந்த முறை பாஜகவுடன் கூட்டணியிலிருந்து விலகிய போதும் இஸ்லாமியர்களை மதிப்பிற்குரிய என கூறியது குறிப்பிடத்தக்கது.அதே வழக்கத்தை இங்கேயும் பின்பற்றுவதால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.