அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!! அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுக உறுதி!!

Photo of author

By Vijay

AIADMK: அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடியின் பதில் தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். அரசியல் சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

2026 ல் வரப்போகும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பரபரப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், கூட்டணி என்ற கதவை திறப்பது மூடுவது எல்லாம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட இணைந்து லஞ்ச லாவண்யம் கொண்ட ஆட்சியை வீழ்த்துவதுதான். பாஜக குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இல்லை முடியாது என்று எதிராக பதிலளிக்காமல் யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.

மேலும் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் யார் யாரிடம் கூட்டணி வைப்பது என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் கூட்டணி அமைக்க முடியும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமைக்கப்படும் அப்போது தெரியவரும் அதற்கு முன் சொன்னாலும் அது நிற்காது,  என்று கூறினார்.