எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!!
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் பாஜக அண்ணாமலைக்கிடையே மோதல் நடைபெற்று வரும் வேலையில் அடுத்தடுத்தாக அண்ணாமலைக்கு பெரும் அடியாகவே உள்ளது.பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் மிகவும் நெருக்கமான சி டி ஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டு விலகுவதாக கூறி எடப்பாடி அணியில் இணைந்ததையொட்டி அடுத்து ஐ டி விங் செயலாளர் திலீப் கண்ணனும் எடப்பாடி அணையில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக கட்சி நிர்வாகி வேட்பாளர் அடுத்தடுத்து இணைந்து வந்த வேலையில் ஐடி விங்கின் உள்ள 13 நிர்வாகிகள் தற்பொழுது எடப்பாடி பக்கம் தாவ உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சி டி ஆர் நிர்மல் குமார் என்றும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்தவர்களை தனது பக்கம் எவ்வாறு இழுக்கலாம் என எடப்பாடி டீம் வேலை பார்த்து வந்த நிலையில், தற்பொழுது எனது நிர்வாகிகளிடமும் அவ்வாறு வேலையை காண்பிக்க தொடங்கியுள்ளார் என அண்ணாமலை கூறியதோடு அடுத்து நானும் அதே வேலையை செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பது போல் எடப்பாடி அவர்களை எச்சரித்தார். இவ்வாறு எடப்பாடி அவர்களை எச்சரித்த நிலையில் தற்போது 13 நிர்வாகிகள் அப்படியே அவர் பக்கம் இணைய உள்ளனர்.
இச்சமயத்தில் நாளை மாஜி அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் இணைவதால் அதிமுகவுக்கு எதிரான பல கருத்துக்களை பாஜக முன்வைத்து வருகிறது.இவ்வாறு கூறும் கருத்துக்களுக்கு எந்த வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி நெற்றி ஓபிஎஸ் அவர்களையும் அண்ணாமலை சந்தித்துள்ளார்.இதனால் எடப்பாடி அவர்களை கழட்டி விட்டுக்கூட ஓபிஎஸ் பக்கம் கட்சியை கொண்டு வந்து முழுவதுமாக நாமே ஆளலாம் என்ற திட்டம் உள்ள அதிக வாய்ப்புக்கள் உள்ளது என அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.