இரட்டை தலைமையை உறுதி செய்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு எடப்பாடி தரப்பு கொடுத்த பதிலடி

Photo of author

By Anand

இரட்டை தலைமையை உறுதி செய்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு எடப்பாடி தரப்பு கொடுத்த பதிலடி

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடியும் நீதிமன்றத்தின் மூலமாக தன்னுடைய இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் இரு தரப்பும் மத்தியில் ஆளும் பாஜகவின் தகவல் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக தலைமை எந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் தற்போது வரை பாஜக தலைமையானது அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பதையே விரும்புகிறது. அதையே அக்கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் உணர்த்தி வந்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடியை கட்சியின் தலைமை என்ற வகையில் சில அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது அதை பொய்யாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் கட்சித் தலைமை என்ற வகையில் பழைய பொறுப்புகளை குறிப்பிட்டுள்ளது.

தொழில் மற்றும் படிப்பு சார்ந்து வெளிமாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய கருத்து கேட்பதற்காக ஆலோசனை கூட்டத்தை நடத்த ஜனவரி 16 ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்தியபிரதசாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் அதிமுகவுக்கு வந்துள்ள கடிதத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இருவருக்கும் சம உரிமையை வழங்கியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற மகிழ்ச்சியில் இருந்த எடப்பாடி தரப்புக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத வகையில் கடிதத்தை அக்கட்சியினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதாவது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளவாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவியில் யாரும் தற்போது இல்லை என்பதால் கடித்து ஏற்றுக் கொள்ள முடியாது என்று காரணத்தை குறிப்பிட்டு அவர்கள் அதை திருப்பி அனுப்பியுள்ளனர்.