Breaking News

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள கல்வி கடன் முகாம்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற உதயநிதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பட்டப்படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘கல்வி கடன் முகாம்’ இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் நடைபெற உள்ளது.

இதில், ஆதார், சாதிச்சான்று, ஆண்டு வருமான சான்று, மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், கலந்தாய்வு கடிதம், நுழைவுத் தேர்வு முடிவுகள், கல்லூரி கட்டண விபரம், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது: “கல்வியும் சுகாதாரமும் நமது திராவிட மாடலின் இரு கண்கள். அந்த வகையில் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் பங்கேற்று மாணவர்கள் பயனடைய வாழ்த்துகிறோம்.”