கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு! போஸ்ட் ஆபிஸில் ‘போஸ்ட்மேன்’ பணி!
இந்திய தபால் துறையில் காலியாக உள்ள “போஸ்ட்மேன்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வேலை: மத்திய அரசு பணி
நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ்
பணி:
*போஸ்ட்மேன்
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இப்பணிக்கு தகுதி, ஆர்வம் இருக்கும் நபர்கள் கூடுதல் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.