Physiotherapist படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவபர்கள் உடனடியாக அப்ளை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Physiotherapist பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: அரசு வேலை
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ வாரியம்(MRB)
பணியின் பெயர்: பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist)
காலிப்பணியிடங்கள்: Physiotherapist பணிக்கு மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் Physiotherapist படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசு விதிகளின் படி வயது வரம்பில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்: Physiotherapist பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,000/- முதல் ரூ.1,14,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
Physiotherapist பணிக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
Physiotherapist பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் http://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பக் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000/-
SC/SCA/ST/DAP பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/-
கூடுதல் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகவும்.