கல்வி தகுதி: டிகிரி.. Income Tax Department – இல் சூப்பர் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
40
#image_title

கல்வி தகுதி: டிகிரி.. Income Tax Department – இல் சூப்பர் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

வருமான வரி துறை (Income Tax Department) காலியாக உள்ள Young Professionals பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் இப்பதவிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 15 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: வருமான வரி துறை (Income Tax Appellate Tribunal)

பதவி: Young Professionals

மொத்த காலியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Young Professionals பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இப்பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Screening

2.நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

இப்பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 15 இறுதி நாள் ஆகும்.