முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

0
125

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

தேவையான பொருட்கள் :முட்டை இரண்டு, கடலை மாவு கால் கப் ,அரிசி மாவு நான்கு டீஸ்பூன், மைதா மாவு மூன்று டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ,மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :முதலில்  முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

பின்பு கடலைமாவு, அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் மற்றும் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை, பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

 

Previous article8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!
Next articleவீட்ல கேஸ் லீக் ஆகுதா? பயப்பட வேண்டாம் உடனே இதை செய்யுங்க!