நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய சத்துக்களில் ஒன்று தான் புரதச்சத்து முட்டையில் நிறைந்து காணப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புரதச்சத்து நிறைந்த முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முட்டையில் புரதசத்தை தவிர்த்து போலேட்,பயோட்டின்,கால்சியம்,பாஸ்பரஸ்,செலினியம்,மெக்னீசியம்,ஜிங்க்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் டி,வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
அது மட்டுமின்றி முட்டையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாகவே தினசரி உணவில் ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முட்டையில் உள்ள மஞ்சள் கருவைவிட வெள்ளைக்கருவில் தான் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த வெள்ளைக்கருவில் கொழுப்பு கிடையாது.உடல் பருமன்,கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் டயட்டில் இருப்பவர்கள் வெள்ளைக்கருவை தாராளமாக உட்கொள்ளலாம்.
மஞ்சள் கருவில் கலோரி 71 கிராம் மற்றும் புரதச்சத்து 6 கிராம் அளவிற்கு நிறைந்துள்ளது.அதேபோல் 5 கிராம் அளவிற்கு கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது.இருப்பினும் சில உடல் உபாதைகள் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
முட்டை மஞ்சள் கரு சாப்பிடக் கூடாதவர்கள் யார்?
1)கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக் கூடாது.முட்டையில் உள்ள அதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
2)இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.முட்டையில் உள்ள கொழுப்பு இதய நோய் பாதித்தவர்களுக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.
3)உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்துவிட வேண்டும்.முட்டையில் உள்ள கொழுப்புச்சத்து உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.
4)கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்ளக் கூடாது.
5)முகப்பரு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொண்டால் அதன் பாதிப்பு அதிகரித்துவிடும்.எனவே முகப்பரு உள்ளவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவது நல்லது.